பந்தலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
பந்தலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பந்தலூர்,
பந்தலூர் பகுதியில் 16 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த பகுதிக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டின் (வயது 25) என்பவர் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது இவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்திக்கொண்ட செபாஸ்டின் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, செபாஸ்டினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.