தம்பிக்கு கத்திக்குத்து அண்ணன் கைது
குடிபோதையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
கணபதி,
கோவை ரத்தினபுரி பாலுசாமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது26). கூலித் தொழிலாளி. இவர்குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகறாறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல குடித்துவிட்டு வந்து தன் தாயாரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தகறாறில் ஈடுபட்டுள்ளார்.
இதைக் கண்ட அவரது தம்பி சித்திரைவேல்(23) மணிகண்டனை தட்டி கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் மணிகண்டன் தகாதவார்த்தகளை பேசியபடி கத்தியை எடுத்து சித்திரைவேலுவை குத்திவிட்டார்.
இதில் ரத்தக்காயம் ஏற்பட்ட சித்திரைவேலுவை அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.