சேலம் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் கொரோனாவுக்கு 468 பேர் பலி
சேலம் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் கொரோனாவுக்கு 468 பேர் பலியாகி உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனாவுக்கு 468 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா என்ற கொடிய நோய் பரவ ஆரம்பித்தது. இந்த நோயால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலும் கொரோனாவால் எந்த ஒரு பாகுபாடின்றி அரசு உயர் அதிகாரிகள், டாக்டர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 33 ஆயிரத்து 85 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 468 பேர் கொரோனாவால் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதில் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் அடங்குவர். மேலும் 32 ஆயிரத்து 440 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
மீண்டும் அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாவட்டத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வந்தது. குறிப்பாக பல நாட்கள் 20-க்கும் குறைவாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கொரோனா வைரசை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் பொதுமக்கள் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடித்தால் தான் கொரோனா வைரசில் இருந்து தப்பித்து கொள்ள முடியும் என்றனர்