பூலாம்பட்டியில் பாலமலை புளி விற்பனைக்கு வந்தது
பூலாம்பட்டியில் பாலமலை புளி விற்பனைக்கு வந்தது.;
எடப்பாடி:
பாலமலையில் உள்ள நிலக்காடு, திம்பம் பொதி, பெரியகுளம், துவரங்காடு உள்பட 25-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இவற்றில் இருந்து அப்பகுதி மலைவாழ் மக்கள் புளியம் பழங்களை பறித்து, பதப்படுத்தி கூடையில் கொண்டு வந்து மலையடிவாரத்திலுள்ள பூலாம்பட்டியில் விற்பனை செய்து வருவது வழக்கம். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த விற்பனை களைகட்டும்.
தற்போது புளியம் பழம் சீசன் தொடங்கி உள்ளதால் பூலாம்பட்டிக்கு 50-க்கும் மேற்பட்டோர் புளிகளை கூடையில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். பாலமலை புளி நல்ல சதைப்புடன் இருப்பதால் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் பூலாம்பட்டிக்கு வந்து பாலமலை புளியை வாங்கி செல்கின்றனர். 15 கிலோ எடையுள்ள புளி கூடை ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது.