தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி பெண் பலி

தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-03-23 23:07 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 65). இவரது உறவினர்கள் ரஞ்சித்குமார் (24), வர்னீஸ்வரன் (30), தர்ஷன் (7). இவர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தென்குமரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். தலைவாசல் அருகே வேதநாயகபுரம் மங்களமேடு பால்சொசைட்டிக்கு அருகில், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த சரோஜா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ரஞ்சித்குமார், வர்னீஸ்வரன், தர்ஷன் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் ரஞ்சித்குமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 
விசாரணை
இது குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்