கோபி பச்சைமலையில் 28-ந் தேதி பங்குனி உத்திர தேர்த்திருவிழா
கோபி பச்சைமலையில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 28-ந் தேதி நடக்கிறது.
கடத்தூர்
கோபி பச்சைமலையில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 28-ந் தேதி நடக்கிறது.
தேர்த்திருவிழா
கோபி பச்சைமலை சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கிராமசாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. யாகசாலை பூஜை, பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா ஆகியவை 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. 27-ந் தேதி சண்முகருக்கு பூக்களால் சிகப்பு சாத்தி அலங்காரம் நடைபெறுகிறது.
அலகு குத்துதல் ரத்து
முக்கிய முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள்.
அன்று காலை முதல் மாலை வரை முருகன் பச்சைபட்டு, பச்சைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 29்-ந் தேதி காலை 10 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு அன்னதானம், அலகு குத்துதல் போன்றவை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.