தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-03-23 22:43 GMT
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ரிச்சார்டு (வயது 48). விவசாயி. இவர் தனது தன்னுடைய தோட்டத்தில் 1½ ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளன.  இந்தநிலையில் நேற்று பகல் 2 மணியளவில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து ரிச்சர்டு குழாய் மூலம் அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தார். எனினும் கரும்புகளும், சொட்டுநீர் பாசன குழாய்களும் எரிந்து நாசமானது. 

மேலும் செய்திகள்