பெருந்துறை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3 மாதங்களாக...
ஈரோடு மாவட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி சீலம்பட்டி. இந்த பகுதியில் 1,600 பேர் வசித்து வருகிறார்கள். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் பிரதான குழாய் இந்த பகுதி வழியாக செல்கிறது. இதற்காக இந்த பகுதியில் குழாய்கள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. இதனால் பல இடங்களில் காவிரி ஆற்று குடிநீர் குழாய்கள் உடைந்துவிட்டன. இதன்காரணமாக இங்குள்ளவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதி பொதுமக்களிடம், "அத்திக்கடவு- அவினாசி திட்டம் அந்த பகுதியில் முழுமையடைந்தால் தான், காவிரி ஆற்று குடிநீர் குழாய்களை மீண்டும் பதித்து, தண்ணீர் விடமுடியும் என்றும், அதுவரை தற்காலிகமாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்கிறோம்,’ என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை பெருந்துறை- பெத்தாம்பாளையம் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், பேரூராட்சி செயல் அதிகாரி கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘சீலம்பட்டி பகுதிக்கு விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்ு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.