விவசாயிகளுக்கு பயிற்சி
விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்.;
பாவூர்சத்திரம், மார்ச்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ம் ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக கீழப்பாவூர் வட்டார வருவாய் கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்றனர். இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர். மாணவிகள் நிலாபாரதி, நிஷா, நிவேதா, ர.நிவேதா, நுஷ்ரத் பாத்திமா, பத்மஸ்ரீ, பிரசன்ன கோபிகா, பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.