சமத்துவ கட்சி நிர்வாகி தாயார் மறைவு: ராதிகா சரத்குமார் நேரில் ஆறுதல்
சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி தாயார் மறைவை தொடர்ந்து, ராதிகா சரத்குமார் நேரில் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
சுரண்டை, மார்ச்:
நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ராதிகா சரத்குமார் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று தென்காசி மாவட்டம் சுரண்டக்கு வந்த ராதிகா சரத்குமார், மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர் எஸ்.வி.கணேசன் வீட்டிற்கு சென்றார். அவரது தாயார் கோமதியம்மாள் கடந்த 11-ந் தேதி மறைவடைந்ததை அடுத்து ஆறுதல் கூறினார்.
அவருடன் தென்காசி தொகுதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்காசி தொகுதி வேட்பாளர் தங்கராஜ் மற்றும் ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் செல்வகுமார் மற்றும் கட்சியினர் உடன் சென்றனர்.