செவிலியரிடம் நகை பறித்த வாலிபர் கைது
சிதம்பரம் அருகே செவிலியரிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அருகே ஏ.மண்டபம் பகுதியில் அண்ணாமலைநகர் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், புதுச்சேரி ஜெய்கணேஷ் நகர் காமராஜர் தெருவை சேர்ந்த விஜி(வயது 24) என்பதும், கிள்ளை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 16-ந் தேதி செவிலியர் ஒருவரிடம் 3½ பவுன் நகை பறித்ததும், இதேபோல் முத்தாண்டிகுப்பம், ராமநத்தம், சிதம்பரம் தாலுகா பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து விஜியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8½ பவுன் நகை பறி முதல் செய்யப்பட்டது.