கஞ்சா விற்ற 2 பேர் கைது

சிதம்பரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-03-23 20:48 GMT
சிதம்பரம், 

சிதம்பரத்தில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் பள்ளிப்படை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும், 2 வாலிபர்கள் ஓடினர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார், விரட்டிச்சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சிதம்பரம் காரிய பெருமாள் கோவில் குளக்கரையை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவகுமார்(வயது 24), ஓமகுளம் ஜமால் நகரை சேர்ந்த உமர் பாருக் மகன் முஸ்தபா(19) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்