மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாள் திருவிழாவையொட்டி மஞ்சள், சந்தனம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் கோவில் பிரகாரத்தில் இருந்து செல்லியம்மன், மாரியம்மன், விநாயகர், காத்தவராயன் ஆகிய சுவாமிகள் வீதி உலாவாக கன்னிக்கோவில் வழியாக குண்டவெளி முக்கிய வீதிகள், வடக்கு தெரு, மீன்சுருட்டி பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மணிவண்ணன் செய்திருந்தார்.