கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-03-23 20:40 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நகராட்சி அலுவலகம் முன், மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ரெங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைசாமி, தலைவர் அகஸ்டின், பொருளாளர் சிற்றம்பலம் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களின் ஊதியத்தில் சேமநல நிதி, தொழிலாளர் மாநில காப்புறுதி (இ.எஸ்.ஐ.) மற்றும் காப்பீட்டு தொகைக்காக பணம் பிடித்தம் செய்து அதனை கட்டாமல் அதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் மரணம் அடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய பணப்பயன்கள் மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்