முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2021-03-23 20:40 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
முத்து மாரியம்மன் கோவில் 
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
முன்னதாக கொடியானது நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. 
பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ெகாடியேற்றப்பட்டது. 
சாமி தரிசனம் 
இதில் நாடார் டிரஸ்ட் நிர்வாகிகள், அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்