மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செட்டித்திருக்கோணம் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் போலீசாரை கண்டவுடன் டிராக்டரை ஓடையிலேேய விட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற நபரை தேடி வருகிறார்கள்.