மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் இதுவரை 2 ஆயிரத்து 271 பேர் சிகிச்சைப்பெற்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் வட்டாரத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்காக பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், பெரம்பலூர், திருச்சி தனியார் மருத்துவமனைகளிலும் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.