நெல்லையில் வாகன சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கியது

நெல்லையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கியது.;

Update: 2021-03-23 20:36 GMT
நெல்லை, மார்ச்:
நெல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கியது.

வாகன சோதனை

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை டவுன் குறுக்குத்துறை ரோட்டில் நேற்று காலை பறக்கும் படை அதிகாரி வேலப்பன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெருமாள்சாமி என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

ரூ.2 லட்சம் பறிமுதல்

அப்போது அவரிடம் ரூ.2 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் புதிதாக வீடு கட்டும் பணிக்காக ஒருவரிடம் பணம் வாங்கிச்செல்வதாக கூறினார். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என தெரிகிறது.   
இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி, அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு சம்பந்தப்பட்டவரிடம் அதிகாரிகள் கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்