தேர்தல் விழிப்புணர்வு பலூன்

சிவகாசி பஸ் நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பலூனை கலெக்டர் கண்ணன் பறக்க விட்டார்.

Update: 2021-03-23 20:14 GMT
சிவகாசி, 
சிவகாசி பஸ் நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பலூனை கலெக்டர் கண்ணன் பறக்க விட்டார். 
விழிப்புணர்வு பலூன் 
சிவகாசி பஸ் நிலையத்தில் நேற்று 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹூலியம் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 
பறக்க விடப்பட்ட ஹூலியம் பலூனில் 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது உரிமை, எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜனநாயக கடமை 
மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கண்ணன் தெரிவித்தார். 
இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்