தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
காரியாபட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
வேட்பு மனு தாக்கல்
திருச்சுழி தொகுதியில் சட்டமன்ற தேர்தலையொட்டி முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராமங்களில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச்சாவடி
அதேபோல தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் வாக்குச்சாவடி மையங்களில் முன்ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கல்குறிச்சி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் திருச்சுழி தொகுதி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சுரேந்திர பிரசாத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் முன் ஏற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின் போது காரியாபட்டி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் திருக்கண்ணன் உடனிருந்தார்.