புகையிலை விற்ற 2 பேர் கைது

சாத்தூரில் புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-23 19:55 GMT
சாத்தூர், 
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சடையம்பட்டி சமுதாய மடத்திற்கு முன்பு பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்ற. அதேகிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது57) என்பவரிடம் இருந்து 15 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி அருகே டீக்கடையில் வைத்து புகையிலை விற்ற சக்திவேல் (49) என்பவரிடம் இருந்து 5 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், அவரை  கைது செய்தனர்.


மேலும் செய்திகள்