சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 179ஆக உயர்வு
மதுரையில் நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 179ஆக உயர்ந்துள்ளது.
மதுரை,மார்ச்
மதுரையில் நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 179ஆக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கிறது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் மதுரையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 30 பேர் நகர் பகுதியையும், 10 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 538 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மதுரையில் சிகிச்சையில் இருந்து நேற்று 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதில் 8 பேர் நகர் பகுதியையும், 4 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 897ஆக அதிகரித்து உள்ளது.
இவர்களை தவிர அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எச்சரிக்கை
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நோய் தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.