தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

சிவகாசியில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

Update: 2021-03-23 19:49 GMT
சிவகாசி, 
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரிகல்லூரியின் நாட்டுநலப்பணிதிட்டம் சார்பில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரியின் வளாகத்தில் கோலப்போட்டி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார். இளம் வாக்காளர்களிடையேவிழிப்புணர்வு என்ற தலைப்பில் நடைபெற்ற கோலப்போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவிகள் வண்ணமயமான கோலங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரைந்தனர். இந்த கோலப்போட்டியில் 27 குழுக்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். சிறப்பான கோலம் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜாஸ்மின்பாஸ்டினா, முத்துசிதம்பரபாரதி, மனோஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்