ஊத்தங்கரை அருகே வயலில் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது

ஊத்தங்கரை அருகே வயலில் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது.

Update: 2021-03-23 19:28 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை திருவண்ணாமலை மெயின்ரோடு ஆசிரியர் நகர் குடியிருப்பு பகுதியில் கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து அங்குள்ள வயலில் பதுங்கி இருந்த கட்டு விரியன் பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை ஒன்னகரை காப்புக்காட்டில் தீயணைப்பு படையினர் விட்டனர்.

மேலும் செய்திகள்