கள்ளக்குறிச்சியில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2021-03-23 18:34 GMT
கள்ளக்குறிச்சி

வாக்கு எண்ணிக்கை மையம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி.நினைவு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு்ள்ளது. இங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர் சந்திரசேகர் வாலிம்பே, ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர் இந்து மல்கோல்ட்ரா, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், செலவின பார்வையாளர் பிரசன்ன வி.பட்டணசெட்டி ஆகியோர் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தனர். 

பாதுகாப்பு வசதி உள்ளதா?

அப்போது 4 தொகுதிகளில் உள்ள 1,569 வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை வைக்கப்படும் அறை, வாக்குகள் எண்ணும் அறை ஆகியவற்றில் போதிய இட வசதி, பாதுகாப்பு வசதி உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.

இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி சப்-கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீகாந்த், வருவாய் அலுவலர் விஜய்பாபு, மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரும், வாக்கு எண்ணிக்கை மையத்தின் அலுவலருமான மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன், உதவி பொறியாளர்கள் சத்தியபிரியா, யாசர் அராபத், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரபாகரன், சையத்காதர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் கமலக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்