பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Update: 2021-03-23 17:57 GMT
காரைக்குடி,

காரைக்குடி சி.மெ.வீதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி கல்யாணி (வயது 58) இவர் அருகில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். சிவகாளியம்மன் கோவில் அருகே வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்