கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.;

Update: 2021-03-23 17:46 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை தினமும் ஒன்று அல்லது 2 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சையில் குணமடைந்து 9 பேர் வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 8 ஆயிரத்து 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 110 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 79 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்