வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தும் 15 வகையான பொருட்கள் தயார்
தேர்தலின் பொது வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தபடவுள்ள 15 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
தேர்தலின் பொது வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தபடவுள்ள 15 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு தேர்தல் பணிக்கு தேவையாக பொருட்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படவுள்ளது. இந்த பொருட்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,679 வாக்குப்பதிவு மையங்களுக்கும் அனுப்பும் வகையில் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் படிவங்கள், அலுவலகப்பயன்பாட்டிற்கான கவர்கள், எழுதுப்பொருட்கள், வாக்காளர்களுக்கு பயன்படுத்தும் அடையாள மை, வழிகாட்டி பதிவேடுகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட 15 வகைப்பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
கிருமிநாசினி
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தோ்தல்) ராம்குமார், தோ்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், கண்காணிப்புபிரிவு அலுவலர் சசிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.