ரூ.1 லட்சம் பித்தளை பொருட்கள் பறிமுதல்

ரூ.1 லட்சம் பித்தளை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-03-23 17:29 GMT
பரமக்குடி
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியம் மும்முடிச்சாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் பித்தளை பாத்திரங்கள் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வியாபாரம் செய்வதற்காக நயினார்கோவில் வழியாக ராமநாதபுரத்திற்கு லாரியில் பித்தளை பாத்திரங்களை கொண்டு சென்றுள்ளார். அப்போது அண்டக்குடி விலக்கு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 56 பித்தளை பானைகள், 23 பித்தளை அண்டாக்கள் மற்றும் பித்தளை பொருட்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் இருந்தன. பித்தளை பாத்திரங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்குள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்