கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

நரிப்பையூர் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

Update: 2021-03-23 17:29 GMT
சாயல்குடி
நரிப்பையூர் ஊராட்சி காமராஜபுரம் சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வினைதீர்த்த விநாயகர் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் பூஜைகள் நடக்க விடாமல் 7 மாதங்களாக தடை போட்டுள்ள போலீசாரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், காமராஜபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் மாதம் கோவில் திருவிழா நடை பெற்ற பின்பு கோவிலை போலீசார் கோவிலை பூட்டி சென்றனர். இதுகுறித்து கிராம தலைவர் மூலம் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் மற்றும் அதிகாரிகளிடம் முைறயிட்டும் பலனில்லை. எனவே பூட்டி கிடக்கும் கோவிலை திறந்து பூஜைகள் நடக்க அனுமதி தராததை கண்டித்து வருகிற சட்டமன்றத் தேர்தலை இந்த கிராம மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்