உண்டியல் காணிக்கை ரூ.40 லட்சம்
கள்ளழகர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.40 லட்சம் வசூலாகியிருந்தது
அழகர்கோவில்,மார்ச்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உண்டியல்கள் நேற்று திருக்கல்யாண மண்டப வளாகத்தில் வைத்து திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ.39 லட்சத்து 93 ஆயிரத்து 189-ம், தங்கம் 32 கிராமும், வெள்ளி 370 கிராமும் மற்றும் வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் திறப்பின்போது கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். உண்டியல் பணம் எண்ணும் பணியில் சாய்ராம் பக்த சபையினர், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.