கச்சிராயப்பாளையம் அருகே மாணவி கடத்தல் சிறுவன் கைது
கச்சிராயப்பாளையம் அருகே மாணவி கடத்தல் சிறுவன் கைது
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரை அதே கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுவன் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டான்.
இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப் பதிவுசெய்து மாணவியையும், அவரை கடத்தி சென்ற சிறுவனையும் தேடி கண்டுபிடித்தார். விசாரணைக்கு பிறகு சிறுமியை அவளது பெற்றோருடன் அனுப்பி வைத்த போலீசார் சிறுவனை கைது செய்து கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.