திண்டுக்கல் அருகே தப்பாட்டம் அடித்து வாக்கு சேகரித்த பா.ம.க. வேட்பாளர்
திண்டுக்கல் அருகே பா.ம.க. வேட்பாளர் தப்பாட்டம் அடித்து வாக்கு சேகரித்தார்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக திலகபாமா போட்டியிடுகிறார். நேற்று இவர், திண்டுக்கல் அருகே வீரக்கல், கூத்தம்பட்டி, வண்ணம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வண்ணம்பட்டிக்கு பிரசாரத்திற்காக சென்ற திலகபாமாவுக்கு, பொதுமக்கள் தப்பாட்டம் அடித்து வரவேற்றனர். அவர்களது வரவேற்பை ஏற்ற அவர், தனக்கும் தப்பாட்டம் அடிக்க தெரியும் என்று தெரிவித்தார். அத்துடன் அங்கிருந்த ஒருவரிடம் தப்பை வாங்கி தப்பாட்டம் அடித்தும், ஆடி, பாடியும் மாம்பழம் சின்னத்திற்கு திலகபாமா வாக்கு சேகரித்தார். அவரது வித்தியாசமான இந்த பிரசாரம், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.