வேன் மோதி 1½ வயது குழந்தை பலி

வேன் மோதி 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.;

Update: 2021-03-23 16:10 GMT
மதுரை,மார்ச்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி காளிமுத்து. இவர் பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க தனது 1½ வயது குழந்தை மனோமீனாவுடன் சென்றார். அங்கு அவரை பார்த்துவிட்டு மகளை இடுப்பில் வைத்து கொண்டு பழங்காநத்தம் ரோட்டில் நடந்து சென்றார். திடீரென்று இடுப்பில் இருந்த குழந்தை மனோமீனா தவறி ரோட்டில் விழுந்தது. அப்போது அந்த வழியாக சரக்கு ஏற்றி வந்த வேன் குழந்தையின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே குழந்தை மனோமீனா இறந்துவிட்டது தெரிய வந்தது. 
இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்