கஞ்சா விற்ற 4 பேர் கைது
வருசநாடு பகுதியில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
வருசநாடு போலீசார் சிங்கராஜபுரம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது சிங்கராஜபுரத்தில் மூலவைகை ஆற்று பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்ற 4 பேரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள், சிங்கராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 41), வாலிப்பாறை கிராமத்தை சேர்ந்த சீமான் (26), வருசநாடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (38) மற்றும் வெள்ளி (48) என்றும், அவர்கள் கஞ்சா விற்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.