கோவில்பட்டியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
கோவில்பட்டியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி புது ரோட்டை சேர்ந்த இருளப்பன் மகன் சுரேஷ் (வயது 37). தொழிலாளி. இவர் கோவில்பட்டியில் உள்ள பருத்தி குடோனில் வேலை செய்து வந்தார். இவர் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இவர் வட்டிக்கு வாங்கிய பணத்தை கொடுக்க முடியவில்லை.
இதனால் பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு சென்று, உடனே தருமாறு அடிக்கடி சென்று தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.