தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

மயிலாடும்பாறையில் வயிற்று வலி காரணமாக பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-03-23 15:59 GMT
தேனி:
மயிலாடும்பாறையை சேர்ந்தவர் கனி. இவருடைய மகள் நிவேதா (வயது 18). 

இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் நிவேதா அவதிப்பட்டு வந்தார். 

அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்