அணைக்கட்டு அருகே ஊஞ்சலாடிய சிறுமி கழுத்து இறுகி பலி
அணைக்கட்டு அருகே ஊஞ்சலாடிய சிறுமி கழுத்து இறுகி பலி
அணைக்கட்டு
அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு ஜீவன் கலா (7) என்ற பெண் குழந்தையும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் குழந்தைக்கு புடவையால் கட்டி வைத்திருந்த ஊஞ்சலில் ஜீவன்கலா ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள்.
அப்போது ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த புடவை, சிறுமி ஜீவன்கலாவின் கழுத்தில்சுற்றி இறுகியது. இதில் மயங்கிய நிலையில் இருந்த ஜீவன்கலாவை அவரது பெற்றோர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்குசிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.