கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக செயல்பட்ட திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு சிறப்பு விருது
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக செயல்பட்ட திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு சிறந்த விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில் குறிப்பாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தி அதை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வைத்து அதன் மூலம் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை காவல்துறை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக அவர்களுடைய வீட்டுக்கே சென்று தேவையான சிகிச்சை நடவடிக்கைகள் வழங்கும் சிறப்பான சேவை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு செயலியின் மூலமாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது போக்குவரத்து தடையின்றி செல்ல பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களின் மூலம் போக்குவரத்தை சீர் செய்யப்பட்டு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாக செயல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை குறைத்தமைக்காக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட காவல் துறைக்கு 2020-ம் ஆண்டிற்கான சிறந்த விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.