“வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்" - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றுவோம் என்று போடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தேனி,
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வம் 3-வது முறையாக போட்டியிடுகிறார். போடி சட்டமன்ற தொகுதிக்கு பழனிசெட்டிபட்டி பேரூராட் சியில் ஜவஹர் நகர், தந்தை பெரியார் தெரு, பெரிய தெரு, மந்தையம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழகத்தில் 10 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர். நல்லாட்சி நடத்தினார். 16 ஆண்டு காலம் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தினார். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை செயல் படுத்தினார். அந்த நல்லாட்சி தமிழகத்தில் தொடர அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் அ.தி. மு.க. அளிக்கும் வாக்குறுதி களை ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். விலை யில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவோம் என்றோம். முழுமையாக அந்த திட்டம் செயல்படுத்தப் பட்டது. தாலிக்கு 4 கிராம் தங்கம் திருமண நிதி உதவி அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்தி வழங்கினோம்.
ஆனால், 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார் கள். ஆட்சிக்கு வந்த பின்பு அதை வழங்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது செல்லாத நோட்டு. நமது தேர்தல் அறிக்கை தான் நல்ல நோட்டு.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது போல், திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாகவும், படித்து பட்டம் பெற்ற பெண் களுக்கான திருமண நிதி உதவியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்குவோம். விலையில்லா வாஷிங் மெஷின் தருவோம். அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்குவோம். வாக் குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். நாம் சொன்னதை செய்திருக் கிறோம். செய்வதை தான் சொல்கிறோம். பொய் சொல்ல மாட்டோம்.
போடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொகு திக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செய்து இருக்கிறேன். குறிப்பாக பழனிசெட்டிபட்டி பேரூராட் சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள் ளேன். தமிழகத்தில் 526 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகளில் தான் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதில், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியும் ஒன்று. இந்த பேரூராட்சி பகுதிகளில் ரூ.60 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு உள்ளன. உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக் காக தொண்டாற்ற மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாலையில் ஆதிப் பட்டி, வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், மஞ்சிநாயக்கன் பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வலையபட்டி, கோடாங்கி பட்டி, போடேந்திரபுரம், சடையால்பட்டி, வாடிப் பட்டி, மாணிக்காபுரம், காமராஜபுரம், பத்திரகாளி புரம் ஆகிய இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன் சக்கர வர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன் மற்றும் பா.ஜனதா, பா.ம.க., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிக ளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மாலையில் நடை பெற்ற பிரசாரத்தில் நடிகை விந்தியா கலந்து கொண்டு ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பேசினார்.