கரூர் மாவட்டத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
கரூர் மாவட்டத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கரூர்,
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் ேபாட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சியில் கூட்டணி கட்சியான பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரையும் ஆதரித்து நாளை (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
காலை 9 மணிக்கு கரூர் பஸ் நிலையம் அருகேயும், காலை 10.30 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட க.பரமத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
போலீசார் பாதுகாப்பு
இதையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.