அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளில் 57 பேர் போட்டி
வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 57 பேர் போட்டியிடுகின்றனர்.
அரியலூர்:
வேட்புமனுக்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 12-ந் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 20-ந் தேதி நடந்தது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 மனுக்களில் நிராகரிக்கப்பட்ட மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட 9 மனுக்கள் போக 13 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதேபோல் ஜெயங்கொண்டம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 22 மனுக்களில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 13 மனுக்கள் ஏற்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்(தனி) தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்களில் 7 மனுக்கள் நிராகரிப்பு மற்றும் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 9 மனுக்கள் ஏற்கப்பட்டன. குன்னம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 32 மனுக்களில் 6 மனுக்கள் நிராகரிப்பு மற்றும் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 23 மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேட்பாளர் இறுதி பட்டியல்
வேட்புமனுக்கள் வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும். இதில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. குன்னம் தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்த முடிமன்னன் நேற்று மாலை தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத்தொடர்ந்து நேற்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி அரியலூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள், ஜெயங்கொண்டம் தொகுதியில் 13 வேட்பாளர்கள், பெரம்பலூர் தொகுதியில் 9 வேட்பாளர்கள், குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அரியலூர் தொகுதி
அரியலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இறுதி பட்டியலை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1. சு.ராஜேந்திரன் - அ.தி.மு.க.
2. கு.சின்னப்பா - ம.தி.மு.க.(தி.மு.க. கூட்டணி)
3. துரை.மணிவேல் - அ.ம.மு.க.
4. சுகுணா குமார் - நாம் தமிழர் கட்சி
5. பி.ஜவகர் - இந்திய ஜனநாயக கட்சி(ம.நீ.ம. கூட்டணி)
6. வே.சவரிஆனந்தம் - பகுஜன் சமாஜ் கட்சி
7. தங்க.சண்முக சுந்தரம் - புதிய தலைமுறை மக்கள் கட்சி
8. ஜெ.குமார் - (சுயே)
9. வி.சிவதாசன் - (சுயே)
10. ப.தேவா - (சுயே)
11. மு.மணிகண்டன் - (சுயே)
12. க.ரமேஷ் - (சுயே)
13. ச.ரவிச்சந்திரன் - (சுயே)
ஜெயங்கொண்டம் தொகுதி
ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியலை உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1. க.பாலு - பா.ம.க.(அ.தி.மு.க. கூட்டணி)
2. க.சொ.க.கண்ணன் - தி.மு.க.
3. ஜெ.கொ.சிவா - அ.ம.மு.க.
4. நீ.மகாலிங்கம் - நாம் தமிழர் கட்சி
5. கு.சொர்ணலதா என்ற லதா - இந்திய ஜனநாயக கட்சி(ம.நீ.ம. கூட்டணி)
6. க.நீலமேகம் - பகுஜன் சமாஜ் கட்சி
7. ஆ.நடராஜன் - அண்ணா திராவிடர் கழகம்
8. வி.கே.கேசவராஜன் - (சுயே)
9. ரா.சதீஸ்குமார் - (சுயே)
10. அ.சாமுவேல் மார்டின் - (சுயே)
11. க.சுடர்விழி - (சுயே)
12. ரா.சேதுராமன் - (சுயே)
13. சா.ராஜ்குமார் - (சுயே)
பெரம்பலூர் தொகுதி
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலையும், அவர்களுக்கான சின்னங்களையும் பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், சப்-கலெக்டருமான பத்மஜா வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1. ரா.தமிழ்ச்செல்வன் - அ.தி.மு.க.
2. பிரபாகரன் - தி.மு.க.
3. கி.ராஜேந்திரன் - தே.மு.தி.க.(அ.ம.மு.க. கூட்டணி)
4. மகேஸ்வரி - நாம் தமிழர் கட்சி
5. சசிகலா - இந்திய ஜனநாயக கட்சி(ம.நீ.ம. கூட்டணி)
6. ராதிகா - புதிய தமிழகம் கட்சி
7. க.ராஜேந்திரன் - பகுஜன் சமாஜ் கட்சி
8. குணசேகரன் - தேசியவாத காங்கிரஸ் கட்சி
9. சதீஷ் - (சுயே)
குன்னம் தொகுதி
குன்னம் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1. ஆர்.டி.ராமச்சந்திரன் - அ.தி.மு.க.
2. எஸ்.எஸ்.சிவசங்கர் - தி.மு.க.
3. கார்த்திகேயன் - அ.ம.மு.க.
4. ப.அருள் - நாம் தமிழர் கட்சி
5. சாதிக் பாட்சா - மக்கள் நீதி மய்யம்
6. பாண்டியன் - பகுஜன் சமாஜ் கட்சி
7. ராவணன் - புதிய தலைமுறை மக்கள் கட்சி
8. புகழேந்தி- (சுயே)
9. செல்வராஜ்- (சுயே)
10. அருள் - (சுயே)
11. மணிகண்டன்- (சுயே)
12. கலையரசி - (சுயே)
13. கதிரவன் - (சுயே)
14. மதியழகன் - (சுயே)
15. முத்தமிழ்செல்வி - (சுயே)
16. பிரகாஷ் - (சுயே)
17. பாலமுருகன் - (சுயே)
18. கலைச்செல்வி - (சுயே)
19. செல்வம் - (சுயே)
20. வினோத்குமார்- (சுயே)
21. திரைப்பட இயக்குனர் கவுதமன் - (சுயே)
22. சுரேஷ்குமார் - (சுயே)
வாக்குப்பதிவு எந்திரம்
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் 15 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் வாக்குப்பதிவின்போது ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும், அதற்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்படும். அதன்படி அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் 15 எண்ணிக்கைக்கு குறைந்த அளவே வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அந்த தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.