அரியலூரில் 6 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரியலூர், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் தலா ஒருவருக்கு என மொத்தம் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 708 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.