13 ஆயிரம் மூட்டை பூண்டுகள் விற்பனைக்கு வந்தன

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு 13 ஆயிரம் மூட்டை பூண்டுகள் விற்பனைக்கு வந்தன.

Update: 2021-03-22 23:48 GMT
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள உருளைக்கிழங்கு மார்க்கெட்டுக்கு கோலார், குஜராத், திம்பம் ஆகிய பகுதிகளில் இருந்து 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு 48 லோடு விற்பனைக்கு வந்திருந்தது. 

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு சீசன் இல்லாததால் அங்கிருந்து உருளைக்கிழங்கு எதுவும் வரவில்லை. 

இந்த ஏலத்தில் கோலார் உருளைக்கிழங்கு ரூ.500 முதல், ரூ.650 வரை, குஜராத் உருளைக்கிழங்கு ரூ.450 முதல் ரூ.550 வரை, திம்பம் உருளைக்கிழங்கு ரூ.500 முதல் ரூ.600 வரையும் விற்பனையானது.  

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள பூண்டு மண்டிகளுக்கு ஊட்டி, திம்பம் ஆகிய பகுதிகளில் இருந்து 40 கிலோ எடை கொண்ட 13 ஆயிரம் மூட்டை வெள்ளை பூண்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

ஏலத்தில் ஊட்டி வெள்ளைப் பூண்டு கிலோ ரூ.20 முதல் ரூ.130 வரையும், தாளவாடி பூண்டு ரூ.20 முதல் ரூ.95 வரையும் ஏலம் போனது.

மேலும் செய்திகள்