கேத்தி பகுதியில் 3 பேருக்கு கொரோனா
கேத்தி பகுதியில் 3 பேருக்கு கொரோனா உறுதியானது.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள கேத்தி பகுதியில் டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கும், கோவை மற்றும் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த 2 பேருக்கும் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என 30 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.