திருச்சியில் கட்சி பிரமுகர் கைது

திருச்சியில் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-03-22 21:37 GMT
திருச்சி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நேருஜி நகரில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதனை ஆய்வு செய்த பறக்கும் படை குழு சி பிரிவை சேர்ந்த அதிகாரி கம்பன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருச்சி உய்யகொண்டான் திருமலை காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பிரான்சிஸ் மீது அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்