வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு
ஆலங்குளத்தில் வேட்புமனு நிராகரிக்கப்படடதால் விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஆலங்குளம், மார்ச்:
ஆலங்குளம் அம்பை ரோடு ஐந்தாவது சந்து பகுதியை சேர்ந்தவர் முத்து கனி மகன் ஆத்தியப்பன் (வயது 37). செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். ஆலங்குளம் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஆத்தியப்பன் மனு செய்திருந்தார். இந்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு வந்து விஷம் குடித்தார்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவம் ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.