அம்பை தொகுதியில் காவல்துறை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
அம்பை தொகுதியில் காவல்துறை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
அம்பை, மார்ச்:
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் காவல்துறை தேர்தல் பார்வையாளரும், ஐ.ஜி.யுமான சுதன் சுகுமார் நேரில் ஆய்வு செய்தார். இதையொட்டி அம்பை போலீஸ் நிலையத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் அம்பை துணை சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அம்ைப சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் சுதன் சுகுமாார் நேரில் ஆய்வு செய்தார். மேலும் தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.