மரக்கன்று நடும் விழா

வள்ளியூர் கோர்ட்டில் மரக்கன்று நடும் விழா நடந்தது.;

Update: 2021-03-22 20:42 GMT
வள்ளியூர், மார்ச்:
வள்ளியூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அலிமா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது மரக்கன்றுகளை நட்டார். இதில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் தவசிராஜன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முத்து கேசவன், செயலாளர் காந்திமதிநாதன், உரிமையியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் யூக்ளிட், செயலாளர் ராவணசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்