மதுவில் போதை மாத்திரை கலந்து விற்றவர் கைது
மதுவில் போதை மாத்திரை கலந்து விற்றவர் கைது செய்யப்பட்டார்
திருமங்கலம்
சிந்துபட்டி அருகே உள்ள நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வம்(வயது 66). இவர் வீட்டின் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற செல்வத்தை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மது பாட்டில்களில் போதை மாத்திரை கலந்து விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து 91 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.